Tuesday, September 28, 2010

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 01

ஜோதிடத்தின் செயன்முறையினை விளங்க‌ கம்பியூட்டரினை ஒரு உதாரணமாக எடுத்து விளங்க முற்படுவோமானால் இதில் இரண்டு முக்கியமான பாகங்கள் காணப்படுகின்றது. ஒன்று  வன்பொருள் மற்றையது அதனை இயக்கும் மென்பொருள். வன்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது பௌதிகப் பொருட்க்களால், மென்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது "ப்ரோகிராமிங் லாங்குவேஜ்" எனப்படும் மொழிகளினால். இந்தப் ப்ரோகிராமிங்கிற்குரிய திட்டம் பயன்படுத்துபவரின் தேவைக்கமைய உருவாக்கப்படுகிறது.இதுபோல் ஒவ்வொரு மனிதனதும் ப்ரொகிரமிங் கோட் தான் ஜாதகம். இது எழுதப்படுவது அந்த மனிதனது பூர்வகர்ம விதிக்கமைய, அவ்விதியின் பலாபலன்களை கூட்டிக் குறைத்து நிர்ணயிப்பது நவகோள்கள்.

ஜோதிடத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்க்கு கர்ம விஞ்ஞானத்தினை நன்கு விளங்கிக்கொள்வது அவசியம். கர்மம் என்பது பொதுவாக செயலினைக்குறிக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் உப்புத்தின்றவன் தண்ணிகுடிப்பான் என்பதே சிறந்த உதாரணம். கர்மா என்பது தர்க்கவியலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கை. மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நன்மை தீமை இப்படியான வேற்றுமைகளிற்க்கு என்னகாரணம் என்பதற்க்கு கர்ம விஞ்ஞானம் பதிலளிக்கிறது. இதன் படி ஒருமனிதன் செயலினைச் செய்துவிட்டால் அதற்குரிய பலன் உடனடியாகவே அவனது பேரட்டில் பதியப்படுகிறது, அதன் படி அவன் தனது செயலிற்கான முடிவினை சூஷ்மமாக முடிவு செய்துகொள்கிறான். தனது இச்சா சக்தி தவிர்ந்து எக்காரணம் கொண்டும் அதற்கான‌ விளைவிகளிலிருந்து அவன் தப்பமுடியாதபடி அவனது செயலிற்கான விளைவுகள் அமைந்துவிடுகின்றன. இதனைக் காட்டும் குறிகாட்டிகளாக கிரகங்கள் செயற்ப்படுகின்றன.

அப்படியென்றால் மனிதன் தனது செய்த செயலிற்கான விளைவுகளை மாற்றவேமுடியாதா? முடியும் என்பதுதான் ஜோதிடம், இப்பிரச்சினையினை தெளிவாக விளங்கிக்கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வுக்கருவியாகவும் ஜோதிடம் பயன்படுகிறது. இதனை அறிந்தபின் தமது இச்சாசக்தியால் வலிந்து முயல்வதனால் அதன் தீவிரத்தினைக் குறைக்கலாம் என்பது ஆன்றோரது முடிவு.

இது பற்றி மேலும் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்!

No comments:

Post a Comment