Sunday, October 3, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 06

பதினோராவது அடிப்படை ஹோரை அல்லது ஓரை: ஒவ்வொரு நாளும் சூரியோதயத்துடன் ஆரம்பமாகி அடுத்த நாள் சூரியோதயத்தில் முடிவுறுகிறது. இந்தக் காலப்பகுதி 24 சம பகுதியாகப் பிரிக்கப்பட்டு அந்நேரம் ஹோரை எனப்படுகிறது. இது அண்ணளவாக ஒரு மணி நேரத்திற்க்குச் சமனானதாகும். இந்த நேரமானது ராகு கேது தவிர்ந்த மற்றைய ஏழு கிரகங்களினால் ஆளப்படுகிறது. எந்தவொரு நாளினதும் ஹோரையானது அந்த நாளின் அதிபதியுடன் தொடங்கும். ஹோரையின் அதிபதி பூமியின் சுழற்சியுடன் மற்றைய ஏழு கிரகங்களினதும் வேகத்தினை இறங்கு வரிசை படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். சனி, வியாழன், செவ்வாய்,சூரியன், சுக்கிரன், புதன்,சந்திரன் எபன்பது இந்த வரிசையாகும். 

இதன் மூலம் குறித்த நேரத்தின் ஹோரை என்னவென்பதினை அறிந்து கொள்ள கீழ்வரும் கணித முறையினை உதாரணமாக கொள்ளலாம்.

உதாரணமாக மாலை 09.40 புதன் கிழமை என்ன ஹோரை யென அறிய‌, சூரியோதயம் 06.10 எனக்கொண்டால் முதல் ஹோரை புதனாகும், சூரியோதயத்திலிருந்தான நேரம் 21:40 – 6:10 = 15:30, அதாவது சூரியோதயத்திலிருந்து 16 வ்து மணித்தியாலம் நடந்துகொண்டிருக்கின்றது. அப்படியாயின் மேற்குறிப்பிட்ட வரிசையில (சனி, வியாழன், செவ்வாய்,சூரியன், சுக்கிரன், புதன்,சந்திரன்) புதனிலிருந்து பதினாறாவது கிரகத்திற்கான ஹோரை நடந்துகொண்டிருக்கின்றது. மொத்தம் 7 கிரகங்கள் மேற்குறிப்பட்ட வரிசையில் ஆள்கின்றன, ஆகவே 16 இலும் குறைந்த 7 இன் மடங்கினைக்கழித்தால் (16 -14) வரும் மீதி 2, ஆகவே புதனிலிருந்து இரண்டாவது கிரகம் தற்போதைய ஹோரையினது ஆட்சி கிரகமாகும். அது சந்திரனாகும். 

No comments:

Post a Comment