Tuesday, October 5, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 08

தசா: தசா முறையென்பது இந்திய ஜோதிடத்தின் ஒரு சிறப்பான முறையாகும். இந்திய ஜோதிட முறையில் நூற்றுக்கு மேற்பட்ட தசா முறைகள் காணப்படுகின்றன.ஒவ்வொரு தசாமுறையும் ஒருமனிதனின் வாழ்கையினை தசை, புத்தி, சூக்ஷ்ம புத்தியென பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக்காலப் பகுதிகள் யாவும் ஒவ்வொரு கிரகத்தினால் ஆளப்படுகிறது. சில திசா முறைகள் கிரகத்தினை அடிப்படையாகவும் சிலது ராசியினை அடிப்படையாகவும் கொண்டவை. ஒவ்வொரு திசாமுறைகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தினை படம் பிடித்துக்காட்டும். ஒவ்வொரு திசா முறைக்கும் தனிப்பட்ட விதிகள் காணப்படுகின்றன. அதன் படி ஜாதகத்திற்கான தசாபுத்தி கணிக்கப்பட்டு விளைவுகளை அறிந்து கொள்ளலாம். இது மகாதசை, அந்தர் தசா, சூக்ஷ்ம அந்தர் திசா என வகைப்படுத்தப்பட்டிருக்கும். 


சில தசா முறை ஆயுள், மரணம் பற்றி விரிவாகக் கூறும். அவை ஆயுள் தசா முறை எனப்படும். சில தசா முறைகள் வாழ்க்கையின் பொதுவான விடயங்கள் பற்றி கூறும் தசா முறை பஹலித தசா முறை யெனப்படும்.

மனமானது சந்திரனால் ஆளப்படுகிறது, சில தசாமுறைகள் சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவன, இது நட்சத்திர தசா எனப்படும். சில தசா முறை கிரகங்கள் ராசிகளில் இருக்கும் இருப்பைக் கொண்டு கணிக்க‍ப்படும் தசா ராசி தசா எனப்படும்.

எதிர்வரும் பதிவுகளில் இது பற்றி மேலதிக விபரங்களை ஆழமாகப் பார்ப்போம். 

இத்துடன் ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகளுக்குரிய பதிவுகள் முடிவுறுகின்றன. எதிர்வரும் பதிவுகளில் ஆழமாக ஒவ்வொரு விடயத்தினையும் பார்ப்போம்.  

1 comment:

Chittoor Murugesan said...

பாஸ்!
நோண்டி நுங்கெடுத்திருக்கிங்க. வாழ்த்துக்கள்.

Post a Comment