எமது முன்னோர்கள் அறிந்த அரிய விஞ்ஞானத்தில் ஜோதிடமும் ஒன்று. வானத்தினை உற்று நோக்கினால் நட்சத்திரங்கள் குறித்த ஒழுங்கமைப்பில் பரவிக்காணப்படுகின்றன. அவை எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை, பூமி எவ்வாறு கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ அதுபோல் அவையும் நகர்கின்றன.
இதுபோல் சந்திரன், இதுவும் தனது தோற்றத்தில் தேய்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. வியாழன், வெள்ளி கிரகங்கள் வெற்றுக்கண்ணுக்கு தோற்றுகின்றது. இயற்கையுடன் ஒன்றிய எமது முன்னோர்கள் இவற்றின் அசைவு பூமியில் செல்வாக்கு செலுத்துவதை விஞ்ஞான நோக்கில் அறிந்தனர். உதாரணமாக சந்திரன் வளர்ந்து தேய்வதுடன் கடலின் அலைகளது அளவு மாறுபடுகிறது என்ற உண்மையினை அறிந்தனர். பௌர்ணமி தினத்தில் கடலலை அதிகமாகவும் அமாவாசையில் கடல் வற்றுவதனையும் அறிந்தனர். ஆக சந்திரனது அசைவு, பூமியிலிருந்தான தூரம் என்பவற்றிற்க்கும் பூமியின் நீரின் அசைவிற்க்கும் தொடர்பு இருப்பதனை அறிந்தனர். இதுபோல் வியாழன் குறித்த நட்ச்சத்திரக்கூட்டத்திற்கண்மையில் வரும் பொது மழை அதிகம் கிடைப்பதை அவதானித்தனர். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பதைப் அடிப்படையாக பூமியில் செல்வாக்கு செலுத்தும் கிரகங்கள் மனிதனிலும் செல்வாக்குச் செலுத்துவதை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டனர். இவ்வாறு சிறு சிறு அவதானங்களின் முலம் கருதுகோள்களை உருவாக்கிக்கொண்டு தமது உடல், மனம், செயல்கள் இவற்றினை கிரகங்களின் இயக்கம் பாதிப்பதினை கண்டறிந்தனர். இவையனைத்தும் ஒரு விதிமுறையின் கீழ் நடைபெறுவதினை உணர்ந்தனர். அதனை தொகுத்து விதிமுறையாக்கி அதனை ஜோதிடம் எனப்பெயரிட்டனர். பிரபஞ்சத்திற்க்கும் பூமிக்கும், பிரபஞ்சத்திற்க்கும் மனிதனிற்க்கும் இடையிலான இடைத்தொடர்பு விஞ்ஞானம் தான் ஜோதிடம்.
ஐசேக் நியுட்டன் எப்படி பௌதிகவியல் சிந்தனையை தனது சிறுவயதில்
ஆப்பிள் விழுவதினை அவதானித்து கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதித்து பௌதிகவியலின் கோட்பாடுகளை (laws) அறியத்தந்தாரோ அதைப்போன்று பல மெய்ஞ்ஞானிகளால் பரிசோதித்து உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் தான் ஜோதிடம்.
இந்த வலைப்பின்னல் பதிவுகளின் நோக்கம் "ஜோதிட தத்துவம்", அதாவது எந்த ஒரு விஞ்ஞானத்திற்க்கும் தத்துவம் அடிப்படைத். தத்துவம் புரிந்தால் பிரயோகம் இலகுவாகும். ஆகவே ஜோதிடத்தின் அடிப்படை தத்துவங்களை திட்ட முகாமைத்துவத்தில் பயன்படுத்தப்படும் "பெரும் பட" (Big picture) முறையின் மூலம் விளங்கிக்கொள்வது தான் நோக்கம். ஆர்வமுடைய அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment