ஏழாவது அடிப்படை சூரிய நாள்காட்டி: அதாவது சூரிய கலண்டரில் ஒரு வருடம் என்பது 360 பாகையினையும் மாதம் என்பது 30 பாகையினையும் கடக்க எடுக்கும் நேரமாகும். நாள் என்பது சரியாக 1 பாகையினைக் கடக்க எடுக்கும் நேரமாகும்.
எட்டாவது அடிப்படை திதிகளும் சந்திர நாள்காட்டியும்: சூரியனை வைத்து நாளினைக்கணிப்பது போல் சந்திரனை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் மாதம் திதிகளால் ஆனது. திதி எனப்படுவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாளாகும், அதாவது விளக்கமாகக் கூறுவதானால் சூரியனும் சந்திரனும் ஒரே அகலாங்கில் இருக்கும் போது சந்திர மாததின் 30 திதிகளும் ஆரம்பமாகும். சூரியனை விட்டு சந்திரன் விலகும் போது திதி ஆரம்பமாகும். எப்போது சந்திரன் சரியாக 12 பாகை சூரியனை விட்டு விலகி நிற்கிறதோ அப்போது முதலாவது திதி முடிவுற்று இரண்டாவது திதி ஆரம்பமாகும், 24 பாகையிற்க்கு வரும் போது இரண்டாவது திதி முடிவுற்று மூன்றாவது திதி ஆரம்பமாகும். இவ்வாறு சந்திர மாதத்தில் பன்னிரண்டு பாகைகளுக்கு ஒருதிதியென மொத்தம் 30 திதிகள் வருகின்றன. இந்த முப்பது திதிகளும் இரண்டு பட்சங்களாக
- வளர் பிறை/சுக்கில பட்சம்/ பூர்வபட்சம்: இது சூரியனிலிருந்து சந்திரன் 0º இலுருந்து 180º க்குள் இருக்கும் போது காணப்படுகிறது.
- தேய்பிறை கிருஷ்ணபட்சம் அபர பட்சம்: சந்திரன் 180º இலிருந்து 360º க்குள் உள்ளபோது. இவ்வாறு ஒருமாத இறுதியில் சந்திரன் சூரியனை 360º பாகையால் வந்தடையும். இந்த நாள் அமாவாசை எனப்படும். சரியாக 180º யில் இருக்கும் போது பௌர்ணமி எனப்படும்.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் திதிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளது.
வளர் பிறை/ சுக்கில பட்சம்/ பூர்வபட்சம் | தேய்பிறை/கிருஷ்ணபட்சம் அபர பட்சம் | திதியின் பெயர் | கிரகாதிபதி |
1 | 16 | பிரதமை | சூரியன் |
2 | 17 | துவிதியை | சந்திரன் |
3 | 18 | திருதியை | செவ்வாய் |
4 | 19 | சதுர்த்தி | புதன் |
5 | 20 | பஞ்சமி | வியாழன் |
6 | 21 | சஷ்டி | சுக்கிரன் |
7 | 22 | சப்தமி | சனி |
8 | 23 | அஷ்டமி | ராகு |
9 | 24 | நவமி | சூரியன் |
10 | 25 | தசமி | சந்திரன் |
11 | 26 | ஏகாதசி | செவ்வாய் |
12 | 27 | துவாதசி | புதன் |
13 | 28 | திரயோதசி | வியாழன் |
14 | 29 | சதுர்த்தி | சுக்கிரன் |
15 | பௌர்ணமி | சனி | |
30 | அமாவாசை | ராகு |
No comments:
Post a Comment