Monday, August 1, 2011

சித்த வித்யா விளக்கவுரை


அன்புள்ள நண்பரே,

சித்தரியல் பற்றி புதிய அணுகுமுறையுடன் சித்தர்களது ஆசியுடன் கீழ்வரும் வலைப்பின்னலில் அனுபவக் கட்டுரைகள் பதியப்படுகிறது,

http://yogicpsychology-research.blogspot.com/

தயவு செய்து இந்த அறிவைப்பெருக்கும் முயற்சியில் இணைந்துகொள்ளும் படி அன்புடன் அழைக்கிறோம்

என்றும்
அன்புடன்
சுமனன்

Tuesday, October 5, 2010

இராசிகள்: அடிப்படை - 01

நாம் முன்னைய பதிவுகளில் பார்த்தோம் ராசிகள் என்பது சூரியக்குடும்பத்தினைச் சூழவுள்ள 360 பாகையிலான நட்சத்திர மண்டலம் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்று, இந்த நட்சத்திர மண்டலத்தின் சக்தி நவகோள்களினூடாக மனிதனின் பௌதீக, சூக்ஷ்ம கரணங்களை பாதித்து அவனது செயல்களின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது தான் ஜோதிடத்தின் செயல் தத்துவம், இதனை அடிப்படையாக கொண்டு மனிதனது செயல்களை பாதிக்கும் தன்மைகளை வைத்து 12 ராசிகளும் சில குணாதிசயங்களைக் கொண்டவையாக வகுக்கப்பட்டுள்ளன, அதாவது அவை மனிதனில் அத்தன்மைகளை கூட்டிக் குறைக்ககூடிய அளவிற்கு செயற்படுபவை என்பது தான் அதன் உட்பொருள்.

எமது ரிஷிகளது கருத்துப்படி ராசிமண்டலம் என்பது மஹா விஷ்ணுவாக வர்ணிக்கப்படுகிறது. இதன் உட்பொருள் மஹாவிஷ்ணுவே நீடித்து நிற்கும் தன்மைக்கு (Sustainability) அதிபதி, அதனால் பூமிற்கான அடிப்படை ஆதார சக்தி நட்சத்திர மண்டலங்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திர மண்டலங்கள் மகாவிஷ்ணுவில் உடற்பாகங்களாக உருவகப்படுத்தப்படுகின்றன. மேஷம் மஹாவிஷ்ணுவின் தலை, ரிஷபம் முகம், மிதுனம் கைகள், கடகம் இருதயம், சிம்மம் வயிறு, கன்னி இடுப்பு, துலா நாபிக்கு கீழ், விருட்சிகம் இனப்பெருக்க‌ உறுப்புகள், தனுசு தொடைகள், மகரம் முழங்கால்கள், கும்பம் கணுக்கால்கள், மீனம் பாதங்கள், இதன் படி  அண்டத்திலுள்ளது பிண்டதிலுண்டு என்பதற்கமைய எமது உடலும் ஒப்பிடப்படுகிறது.குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதகத்தில் சிம்மத்தில் கிரக நிலை, வலிமை என்பவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதைப்போல் மற்றைய குறித்த அங்கங்கள் மேற்குறிப்பிட்ட முறைப்படி ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.   

ஒற்றைப்படை இரட்டைப்படை இராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலா, தனுசு, கும்பம்: இவையாறும் ஒற்றை இராசிகள் அல்லது ஆண்ராசிகள் எனப்படும்.

ரிஷபம் கடகம் கன்னி, விருட்சிகம், மகரம், மீனம்: இரட்டை இராசி அல்லது பெண்ராசிகள் எனப்படும்.

இந்த வகைப்படுத்தல் சில தசாமுறைகளிலும், பிறக்கவிருக்கும் பிள்ளையின் பாலினை கணிப்பதற்கு உதவியாக இருக்கின்றது.

சர, ஸ்திர, உபய இராசிகள்
மேஷம், கடகம், துலா, மகரம் இவை சரராசிகள் அல்லது அசையும் இராசிகள், இவற்றின் அதிபதி பிரம்மா,படைப்பின் அதிபதி, இயல்பில் அசையும் தன்மையும் ஆக்கும் தன்மையும் கொண்டவை.

ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் ஆகியப ஸ்திர ராசிகள் அல்லது நிலையான இராசிகள் எனப்படும், இவற்றின் அதிபதி சிவன், அழித்தற் கடவுள், இந்த இராசிகள் இயல்பிலேயே ஸ்திரமானதும் நிலையாந்துமான தன்மையுடையாவை.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்பன இருதன்மையுடையவை, விஷ்ணு இவற்றின் அதிபதி, காத்தல் கடவுள், இவ்விராசிகள் சிலவேளைகளில் ஸ்திரமானவை, சில வேளைகளில் அசையும் தன்மையுடையாவை.

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 08

தசா: தசா முறையென்பது இந்திய ஜோதிடத்தின் ஒரு சிறப்பான முறையாகும். இந்திய ஜோதிட முறையில் நூற்றுக்கு மேற்பட்ட தசா முறைகள் காணப்படுகின்றன.ஒவ்வொரு தசாமுறையும் ஒருமனிதனின் வாழ்கையினை தசை, புத்தி, சூக்ஷ்ம புத்தியென பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக்காலப் பகுதிகள் யாவும் ஒவ்வொரு கிரகத்தினால் ஆளப்படுகிறது. சில திசா முறைகள் கிரகத்தினை அடிப்படையாகவும் சிலது ராசியினை அடிப்படையாகவும் கொண்டவை. ஒவ்வொரு திசாமுறைகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தினை படம் பிடித்துக்காட்டும். ஒவ்வொரு திசா முறைக்கும் தனிப்பட்ட விதிகள் காணப்படுகின்றன. அதன் படி ஜாதகத்திற்கான தசாபுத்தி கணிக்கப்பட்டு விளைவுகளை அறிந்து கொள்ளலாம். இது மகாதசை, அந்தர் தசா, சூக்ஷ்ம அந்தர் திசா என வகைப்படுத்தப்பட்டிருக்கும். 


சில தசா முறை ஆயுள், மரணம் பற்றி விரிவாகக் கூறும். அவை ஆயுள் தசா முறை எனப்படும். சில தசா முறைகள் வாழ்க்கையின் பொதுவான விடயங்கள் பற்றி கூறும் தசா முறை பஹலித தசா முறை யெனப்படும்.

மனமானது சந்திரனால் ஆளப்படுகிறது, சில தசாமுறைகள் சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவன, இது நட்சத்திர தசா எனப்படும். சில தசா முறை கிரகங்கள் ராசிகளில் இருக்கும் இருப்பைக் கொண்டு கணிக்க‍ப்படும் தசா ராசி தசா எனப்படும்.

எதிர்வரும் பதிவுகளில் இது பற்றி மேலதிக விபரங்களை ஆழமாகப் பார்ப்போம். 

இத்துடன் ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகளுக்குரிய பதிவுகள் முடிவுறுகின்றன. எதிர்வரும் பதிவுகளில் ஆழமாக ஒவ்வொரு விடயத்தினையும் பார்ப்போம்.  

Monday, October 4, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 07

பஞ்சாங்கம்; ஐந்து அங்கங்களுடன் கூடியது பஞ்சாங்கம், அனைத்து இந்துக்களினது வீட்டிலும் காணப்படும். மேலே விபரமாகக் கூறிய விடயங்களை எப்பொழுதும் நாம் நேரம் செலவழித்துக் கணித்துக்கொண்டிருக்க இயலாதல்லவா, அதனால் கிரகநிலைகளுடன், திதி ஆரம்பமாகும் நேரம், முடிவுறும் நேரம், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இது நாம் நல்ல நேரம் பார்ப்பதற்கு சிறந்த திதி, கிழமை, நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியன் தேர்ந்தெடுக்க வேண்டும். 

அயனாம்சம்: புவிஅச்சில் ஏற்படும் மாறுபாடுகள் சாயன முறையில் ராசிமண்டலத்தின் ஆரம்பப் புள்ளிகள் மாறுபடுகின்றன. சாயன முறையானது  பூமி மெதுவாக‌ அசையும் பேரூந்து போன்றும் வெளியிலுள்ள மரங்கள் நட்சத்திர மண்டலம் போன்றது. நிராயன முறையில் ராசிமண்டலம் அசைவதில்லை. ஆகவே சாயன் முறையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்றவாறு சரிபடுத்திக்கொள்ளல் அவசியமாகும். இந்த இரு முறைகளுக்குமிடையிலான் வித்தியாசம் மிக முக்கியமானவொன்றாகும்.நவீன பஞ்சாங்கங்கள் சாயன் முறையிலேயே கிரக நிலவரங்களைக் குறிப்பிடும். இந்த கிரகநிலைகளை மாற்றுவதற்கு இரு ராசிமண்டலங்களுக்கிடையிலான வித்தியாசங்களினை கழித்தல் வேண்டும். இந்த வித்தியாசம் நேரத்துடன் மாறுபடும். ஒவ்வொரு வருடமும் புவி அச்சு மாறுபாட்டிற்கமைய இந்த வித்தியாசம் மாறுபடும். இந்த வித்தியாசம் "அயனாம்சம்" எனப்படும். 

ஆனால் இதுபற்றிய மிகத்தெளிவான கருத்துக்கள் இல்லை, பொதுவாக லகிரி அயனாம்சம் பாவிக்கப்படுகிறது. 

அடுத்த பதிவிலிருந்து திசா புத்தி பற்றி விரிவாக பார்ப்போம். 

Sunday, October 3, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 06

பதினோராவது அடிப்படை ஹோரை அல்லது ஓரை: ஒவ்வொரு நாளும் சூரியோதயத்துடன் ஆரம்பமாகி அடுத்த நாள் சூரியோதயத்தில் முடிவுறுகிறது. இந்தக் காலப்பகுதி 24 சம பகுதியாகப் பிரிக்கப்பட்டு அந்நேரம் ஹோரை எனப்படுகிறது. இது அண்ணளவாக ஒரு மணி நேரத்திற்க்குச் சமனானதாகும். இந்த நேரமானது ராகு கேது தவிர்ந்த மற்றைய ஏழு கிரகங்களினால் ஆளப்படுகிறது. எந்தவொரு நாளினதும் ஹோரையானது அந்த நாளின் அதிபதியுடன் தொடங்கும். ஹோரையின் அதிபதி பூமியின் சுழற்சியுடன் மற்றைய ஏழு கிரகங்களினதும் வேகத்தினை இறங்கு வரிசை படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். சனி, வியாழன், செவ்வாய்,சூரியன், சுக்கிரன், புதன்,சந்திரன் எபன்பது இந்த வரிசையாகும். 

இதன் மூலம் குறித்த நேரத்தின் ஹோரை என்னவென்பதினை அறிந்து கொள்ள கீழ்வரும் கணித முறையினை உதாரணமாக கொள்ளலாம்.

உதாரணமாக மாலை 09.40 புதன் கிழமை என்ன ஹோரை யென அறிய‌, சூரியோதயம் 06.10 எனக்கொண்டால் முதல் ஹோரை புதனாகும், சூரியோதயத்திலிருந்தான நேரம் 21:40 – 6:10 = 15:30, அதாவது சூரியோதயத்திலிருந்து 16 வ்து மணித்தியாலம் நடந்துகொண்டிருக்கின்றது. அப்படியாயின் மேற்குறிப்பிட்ட வரிசையில (சனி, வியாழன், செவ்வாய்,சூரியன், சுக்கிரன், புதன்,சந்திரன்) புதனிலிருந்து பதினாறாவது கிரகத்திற்கான ஹோரை நடந்துகொண்டிருக்கின்றது. மொத்தம் 7 கிரகங்கள் மேற்குறிப்பட்ட வரிசையில் ஆள்கின்றன, ஆகவே 16 இலும் குறைந்த 7 இன் மடங்கினைக்கழித்தால் (16 -14) வரும் மீதி 2, ஆகவே புதனிலிருந்து இரண்டாவது கிரகம் தற்போதைய ஹோரையினது ஆட்சி கிரகமாகும். அது சந்திரனாகும். 

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 05

பத்தாவது அடிப்படை கரணங்கள்: ஒவ்வொரு திதியும் இரண்டு கரணங்களாக பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 11 கரணங்கள் காணப்படுகிறது அவையாவன 

  1. பவம் 
  2. பாலவம் 
  3. கௌலவம்
  4. தைதுலை 
  5. கரசை
  6. வணிசை 
  7. பத்திரை 
  8. சகுனி 
  9. சதுஷ்பாதம் 
  10. நாகவம் 
  11. கிம்ஸ்துக்னம் 
முதல் ஏழு கரணங்களும் முதலாவது சந்திர மாத நாளின் இரண்டாவது பாதியில் தொடங்கி 8 தடவைகள் வரும். கடைசி 4 கரணங்களும் 29வது சந்திர நாளின் இரண்டாவது பாதியில் தொடங்கி முதலாவது சந்திர நாளின் முதற் பாதியில் முடியும். 

Saturday, October 2, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 04

ஒன்பதாவது அடிப்படை யோகங்கள்: சந்திரனதும் சூரியனது ஸ்புடத்தினை அல்லது அகலாங்கினை கூட்டி அந்த தொகை 360 இலும் அதிகமாக வருமாயின்
அதனை 360 பாகயில் இருந்து கழித்து வரும் தொகையினை ஒரு நட்சத்திரத்தினது பாகை அளவினால்(13°20' அல்லது 800')வகுத்தால் வேண்டும். வகுக்கும் தொகையில் வரும் தசமங்களை விடுத்து முழுஎண்ணுடன் 1 ஐக் கூட்ட வ்ரும் தொகைக்கான எண்ணை கீழ்வரும் அட்டவணையில் பார்ப்பதன் மூலம் எந்த யோகம் என அறியலா. அல்லது சுலபமாக பஞ்சாங்கம் ஒன்றில் பார்த்துக் கொள்ளலாம்.  

எண்
பெயர்
பொருள்
1
விஷ்கம்பம்
தாங்கும் தூண்
2
பிரீதி
அன்பு/ஆதரவு
3
ஆயுஷ்மான்
நீண்ட ஆயுள்
4
சௌபாக்யம்
அதிஷ்டமுள்ள மனைவி
5
சோபனம்
பிரகாசம்
6
அதிகண்டம்
பெரும் ஆபத்து
7
சுகர்மம்
கடவுளுடன் ஒன்று பட்ட செய்கை
8
திருதி
உறுதி
9
சூலம்
சிவனின் அழித்தலுக்கான ஆயுதம்
10
கண்டம்
ஆபத்து
11
விருத்தி
வளர்ச்சி
12
துருவம்
நிலையானது
13
வியாகாதம்
பெருங் காற்று
14
ஹர்ஷ்ணம்
ஆனந்தமான‌
15
வஜ்ரம்
வைரம்
16
ஸித்தி
சித்தியடைந்த‌
17
வியதீபாதம்
மோசமான பின்னடைவு
18
வரீயான்
தலைமை
19
பரீகம்
தடை
20
சிவம்
தூய்மை /சிவன்
21
ஸித்தம்
பூர்த்தியான‌
22
சாத்தியம்
நடைபெறக்கூடிய‌
23
சுபம்
சுபம்
24
சுப்பிரம்
வெண்மை
25
பிராம்மம்
தூய அறிவும் தூய்மையும்
26
ஜந்திரம்
இறைவர்களின் தலைவன்
 27
வைதிருதி
கடவுளர்களின் வகுப்பு


இதனை ஒரு உதாரண கணிதம் மூலம் விளங்கிக்கொள்ளலாம். 
  • சூரியன் 23°50'இல் மகரத்திலும் சந்திரன் 17°20' இல் துலாவிலும் நிற்பதாக கொள்க, 
  • சூரியனது ஸ்புடம் 23°50' + 9 x 30° = 293°50', 
  • சந்திரனது ஸ்புடம் 17°20' + 6x 30° = 197°20'. 
  • மொத்தம் 293°50' + 197°20' = 491°10'. 
  • மேற்கூறிய விதிப்படி 360 ஐக்கழித்தால் 131°10, 
  • இதனை கலைகளிற்கு மாற்றினால் 131 x 60 + 10 = 7870'. 
  • மேற்குறிப்பிட்ட விதிப்படி ஒரு நட்சத்திரத்தின் அளவால் வகுத்தால் 9.8375 வரும். 
  • தசமதானத்தை விடுத்து முழு எண்ணை எடுத்தோமானால் 9. அதனுடன் ஒன்றைக் கூட்டினால் 10. 
  • ஆக யோகம் கண்ட யோகமாகும். 
அதாவது யோகம் என்பது சூரியனதும் சந்திரனதும் இருப்பை நட்ச்சத்திரத்தினது சார்பாக கணித்து அதன் விளைவினது தன்மையினை பொதுவாக விளக்கும் செயல்முறையாகும்.