Thursday, September 30, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 02

நான்காவது அடிப்படை ராசிச்சக்கரம்: இது குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்கள் எந்த ராசியில் நிற்கின்றது என்பதையும் லக்கினத்தினை சார்பாக வைத்து வீடுகளையும் குறிப்பதாக வரைபு படுத்தப்படும் சக்கரமாகும். இந்திய ஜோதிட முறையில் மூன்றுவிதமாக இந்த ராசிச்சக்கரம் வரைபு படுத்தப்பட்டாலும் நாம் இப்பதிவுகளில் தென்னிந்திய முறையில் பயன்படுத்தப்படும் ராசிச்சக்கரம் மட்டுமே ஆராயப்படுகிறது. இச்சக்கரம் பாவத்தினை அடிப்படையாகக் கொண்டது. 


ஐந்தாவது அடிப்படை வர்க்கச்சக்கரங்கள்:
சாதாரணமாக ராசிச்சக்கரத்தினை உருவாக்கும் போது ஒரு கிரகம் எந்த ராசியில் நிற்கிறது என்பதினை அகலாங்கினைக் கொண்டு கணிப்போம், இதற்கு மேலதிகமாக ராசிகளை 2,4, 6 எனப்பகுதிகளாக பிரிப்பதன் மூலம் வர்க்கச்சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றது. இவ்வொவொரு சக்கரங்களும் வாழ்க்கையின் ஒவ்வொருபகுதி பற்றிய புதிரினை விளக்குகிறது.

ஆக மேலே விளக்கப்பட்டதின் படி இந்திய ஜோதிடம் 
  1. கிரகங்கள் 
  2. ராசிகள் 
  3. பாவம் அல்லது வீடுகள் 
  4. வர்க்கச்சக்கரங்கள் என்ற முக்கியமான நான்கு தூண்களால் ஆக்கப்பட்டுள்ளது.

ஆறாவது அடிப்படை நட்சத்திரங்களும் பாதங்களும்:
ராசிமண்டலம் பன்னிரண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளதென முன்னர் பார்த்தோம். இது மேலும் 27 சமபிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் நட்சத்திரம் எனப்படுகிறது. கணித ரீதியில் ஒவ்வொரு நட்சத்திரமும் 360º/27 = 13º 20 அளவு உடையதாகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கணிதரீதியாக இது 3º 20'அளவுடையது. இதனை பாதம்/கால் எனக்குறிப்பிடுவர். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரும்,அவற்றின் அளவு, உள்ள ராசி, அதிதேவதை மற்றும் விம்சோத்ரி தேவதைகளும் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment