Tuesday, September 28, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞானம் ‍-02

பௌதிகவியலில் எந்த பொருளின் இருப்பை குறிப்பிடுவதற்க்கும் சில கணித ஆள்கூறுகளை பயன் படுத்துவர். ஆள்கூற்றுகேத்திர(geometry)கணிதம் அறிந்தவர்களுக்கு தெரியும் ஒரு பொருளின் இருப்பை குறிப்பிட X, Y, Z என அச்சுகளை பயன்படுத்துவர். பின்பு அதன் அசைவுகளை வரைபுகளில் குறிப்பிடுவதற்கு சார் மாறி,சாராமறி என அதன் தொழிற்பாடுகளை விளங்கப்படுத்துவர். இது போல் பிரபஞ்சம் எனும் வரைபில் மனிதனது இருப்பை, தொழிற்பாடுகளை விளங்கப்படுத்தும் வரைபு முறைதான் ஜோதிடம்.

ஒரு புள்ளியினைச் சுற்றி 360 பாகையிலான வட்டம் காணப்படுகிறது. பூமியினை புள்ளியாக எடுத்தால் ராசிமண்டலம் அதன் சுற்றளவாகின்றது. பூமிக்கும் இந்த ராசி மண்டலத்திற்க்கும் இடையில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய ஏழுகோள்களும் காணப்படுகின்றது. ராகு, கேது என்பன கிரகங்கள் அல்ல, அவை சார்புப் புள்ளிகள்.

இதனை மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள‌ த‌ற்கால விஞ்ஞான ஒப்பீட்டின் மூலமும் அறிந்து கொள்ளலாம். செயற்க்கைக்கோள், விண்ணில் சுழலும் போது எவ்வாறு கீழுள்ள வாங்கி சமிஞ்ஞைகளை பெறுகின்றதோ அது போல் இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் இந்த நட்ச்சத்திர மண்டலங்களிலிருந்து அதற்க்குத்தேவையான இயங்கு சக்திகளைப்பெறுகின்றன. இந்த சஞ்ஞைகளின் அளவுகளை கூட்டி குறைப்பதற்க்கு இடையில் பெருப்பாக்கிகள்(Boosters) காணப்படும். அவைதான் இந்த நவகோள்கள். செயற்க்கைக்கோள்கள் இருக்கும் அமைவிடம், அமைவுக்கோணம், சார்பு, தூரம் என்பவற்றிற்கேற்ப சமிஞ்ஞைகளது தெளிவு மாறுபடுவது போன்று, ஒவ்வொரு மனிதனது குணம், அமைப்பு, வாழ்க்கை என்பன இந்த நட்ச்சத்திர மண்டலத்தினாலும், நவகோள்களினாலும் இருக்கும் ராசிமண்டலம், பூமியின் அமைவிடம், தூரம் என்பவற்றால் அவை தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிரகமும் குறித்த ராசியில் நிற்க்கும் போது பொதுவான ஒரு சமிஞ்ஞையும், நட்ச்சத்திரத்தில் இருக்கும் போது தெளிவான சமிஞ்ஞையினையும் தரும். இதன் படி நமது வாழ்க்கையில், சூழலில் இருக்கும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை நாம் கணித்துக்கொள்ளலாம். தற்போது சூழலியல் ஆய்வுகளிலும், விண்ணியல் மற்றும் பலதுறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் செய‌ற்கைக்கோள் தொழில்நுட்பம் போன்றதுதான் ஜோதிடம். ‌

இந்த ச‌மிஞ்ஞைகளது தெளிவு, தரம் என்பவற்றைக் ஜோதிடத்தில் குறிக்கும் வார்த்தைகள் தான் உச்சம், நீச்சம், நட்பு, பகை, வக்கிரம் என்பன.


No comments:

Post a Comment