பஞ்சாங்கம்; ஐந்து அங்கங்களுடன் கூடியது பஞ்சாங்கம், அனைத்து இந்துக்களினது வீட்டிலும் காணப்படும். மேலே விபரமாகக் கூறிய விடயங்களை எப்பொழுதும் நாம் நேரம் செலவழித்துக் கணித்துக்கொண்டிருக்க இயலாதல்லவா, அதனால் கிரகநிலைகளுடன், திதி ஆரம்பமாகும் நேரம், முடிவுறும் நேரம், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இது நாம் நல்ல நேரம் பார்ப்பதற்கு சிறந்த திதி, கிழமை, நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அயனாம்சம்: புவிஅச்சில் ஏற்படும் மாறுபாடுகள் சாயன முறையில் ராசிமண்டலத்தின் ஆரம்பப் புள்ளிகள் மாறுபடுகின்றன. சாயன முறையானது பூமி மெதுவாக அசையும் பேரூந்து போன்றும் வெளியிலுள்ள மரங்கள் நட்சத்திர மண்டலம் போன்றது. நிராயன முறையில் ராசிமண்டலம் அசைவதில்லை. ஆகவே சாயன் முறையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்றவாறு சரிபடுத்திக்கொள்ளல் அவசியமாகும். இந்த இரு முறைகளுக்குமிடையிலான் வித்தியாசம் மிக முக்கியமானவொன்றாகும்.நவீன பஞ்சாங்கங்கள் சாயன் முறையிலேயே கிரக நிலவரங்களைக் குறிப்பிடும். இந்த கிரகநிலைகளை மாற்றுவதற்கு இரு ராசிமண்டலங்களுக்கிடையிலான வித்தியாசங்களினை கழித்தல் வேண்டும். இந்த வித்தியாசம் நேரத்துடன் மாறுபடும். ஒவ்வொரு வருடமும் புவி அச்சு மாறுபாட்டிற்கமைய இந்த வித்தியாசம் மாறுபடும். இந்த வித்தியாசம் "அயனாம்சம்" எனப்படும்.
ஆனால் இதுபற்றிய மிகத்தெளிவான கருத்துக்கள் இல்லை, பொதுவாக லகிரி அயனாம்சம் பாவிக்கப்படுகிறது.
அடுத்த பதிவிலிருந்து திசா புத்தி பற்றி விரிவாக பார்ப்போம்.
No comments:
Post a Comment