நாம் முன்னைய பதிவுகளில் பார்த்தோம் ராசிகள் என்பது சூரியக்குடும்பத்தினைச் சூழவுள்ள 360 பாகையிலான நட்சத்திர மண்டலம் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்று, இந்த நட்சத்திர மண்டலத்தின் சக்தி நவகோள்களினூடாக மனிதனின் பௌதீக, சூக்ஷ்ம கரணங்களை பாதித்து அவனது செயல்களின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது தான் ஜோதிடத்தின் செயல் தத்துவம், இதனை அடிப்படையாக கொண்டு மனிதனது செயல்களை பாதிக்கும் தன்மைகளை வைத்து 12 ராசிகளும் சில குணாதிசயங்களைக் கொண்டவையாக வகுக்கப்பட்டுள்ளன, அதாவது அவை மனிதனில் அத்தன்மைகளை கூட்டிக் குறைக்ககூடிய அளவிற்கு செயற்படுபவை என்பது தான் அதன் உட்பொருள்.
எமது ரிஷிகளது கருத்துப்படி ராசிமண்டலம் என்பது மஹா விஷ்ணுவாக வர்ணிக்கப்படுகிறது. இதன் உட்பொருள் மஹாவிஷ்ணுவே நீடித்து நிற்கும் தன்மைக்கு (Sustainability) அதிபதி, அதனால் பூமிற்கான அடிப்படை ஆதார சக்தி நட்சத்திர மண்டலங்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திர மண்டலங்கள் மகாவிஷ்ணுவில் உடற்பாகங்களாக உருவகப்படுத்தப்படுகின்றன. மேஷம் மஹாவிஷ்ணுவின் தலை, ரிஷபம் முகம், மிதுனம் கைகள், கடகம் இருதயம், சிம்மம் வயிறு, கன்னி இடுப்பு, துலா நாபிக்கு கீழ், விருட்சிகம் இனப்பெருக்க உறுப்புகள், தனுசு தொடைகள், மகரம் முழங்கால்கள், கும்பம் கணுக்கால்கள், மீனம் பாதங்கள், இதன் படி அண்டத்திலுள்ளது பிண்டதிலுண்டு என்பதற்கமைய எமது உடலும் ஒப்பிடப்படுகிறது.குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதகத்தில் சிம்மத்தில் கிரக நிலை, வலிமை என்பவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதைப்போல் மற்றைய குறித்த அங்கங்கள் மேற்குறிப்பிட்ட முறைப்படி ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒற்றைப்படை இரட்டைப்படை இராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலா, தனுசு, கும்பம்: இவையாறும் ஒற்றை இராசிகள் அல்லது ஆண்ராசிகள் எனப்படும்.
ரிஷபம் கடகம் கன்னி, விருட்சிகம், மகரம், மீனம்: இரட்டை இராசி அல்லது பெண்ராசிகள் எனப்படும்.
இந்த வகைப்படுத்தல் சில தசாமுறைகளிலும், பிறக்கவிருக்கும் பிள்ளையின் பாலினை கணிப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
ரிஷபம் கடகம் கன்னி, விருட்சிகம், மகரம், மீனம்: இரட்டை இராசி அல்லது பெண்ராசிகள் எனப்படும்.
இந்த வகைப்படுத்தல் சில தசாமுறைகளிலும், பிறக்கவிருக்கும் பிள்ளையின் பாலினை கணிப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
சர, ஸ்திர, உபய இராசிகள்
மேஷம், கடகம், துலா, மகரம் இவை சரராசிகள் அல்லது அசையும் இராசிகள், இவற்றின் அதிபதி பிரம்மா,படைப்பின் அதிபதி, இயல்பில் அசையும் தன்மையும் ஆக்கும் தன்மையும் கொண்டவை.
ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் ஆகியப ஸ்திர ராசிகள் அல்லது நிலையான இராசிகள் எனப்படும், இவற்றின் அதிபதி சிவன், அழித்தற் கடவுள், இந்த இராசிகள் இயல்பிலேயே ஸ்திரமானதும் நிலையாந்துமான தன்மையுடையாவை.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்பன இருதன்மையுடையவை, விஷ்ணு இவற்றின் அதிபதி, காத்தல் கடவுள், இவ்விராசிகள் சிலவேளைகளில் ஸ்திரமானவை, சில வேளைகளில் அசையும் தன்மையுடையாவை.